ஆண்ட பரம்பரை குறித்த பேச்சு : அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
நான் பேசியதை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து தேர்வானவர்களுக்கான பாராட்டு விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டார். அப்போது, நாம் ஆண்ட பரம்பரை… வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று (ஜனவரி 2) மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “அந்த கேசட்டை முழுமையாக பார்த்துவிட்டு கேள்வி…