அதுல தானே நட்பு இருக்கு! : அப்டேட் குமாரு
அம்மாவின் அகராதியில்
‘பார்த்து போ..’ is a word
‘செத்து கித்து தொலையாத..’ is an emotion
தொடர்ந்து படியுங்கள்அம்மாவின் அகராதியில்
‘பார்த்து போ..’ is a word
‘செத்து கித்து தொலையாத..’ is an emotion
தொடர்ந்து படியுங்கள்வீட்டு உபயோக சிலினர் விலை ரூ 100 குறைப்பு – செய்தி
அப்போ பேங்க் மானியம் 24 ரூபாய் லிருந்து 24 காசு ஆகிடுமோ
டைரி என்பது
வாழ்க்கை நினைவுகளை எழுதும் ஒரு பொக்கிஷம் என்பதில் இருந்து
பாஸ்வேர்ட் நினைவில் வைத்துக்கொள்ள எழுதும் ஒரு நோட்டு என்றளவில் மாறி போனது.
சுவிட்சர்லாந்தை மக்கள் மறக்கும் அளவுக்கு காஷ்மீரை ஒரு சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்துவோம்!” -பிரதமர் மோடி புதிய உத்தரவாதம்
# இது தெரியாம சுவிட்சர்லாந்து போக நாலஞ்சு சீசன் டிக்கெட் புக் பண்ணிட்டனேப்பா..
அதிமுக பிரச்னையில ‘குளிர்காய’ விரும்பலை: அண்ணாமலை!
‘வெயில்’ காலம் வந்திடுச்சு போல..?!
2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க த வெ க முடிவு – செய்தி
இவங்க ஒரு 2 கோடி , அதிமுக EPS 2 கோடி , OPS 2 கோடி , சசிகலா 2 கோடி , திமுக 2 கோடி …
அடேய் தமிழ்நாடு மொத்த வாக்காளர்களே 6 கோடி தாண்டா
தேர்தல் வரை விவரங்களை வெளியிட தடை வாங்குவார்கள்
பின்பு ஜெயித்தால் வேறு ஹிந்தி பெயரில் இதே பத்திரம் வெளியே வரும் 😀
ElectoralBonds
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது!- ஆளுநர் ரவி ஆதங்கம்.
ஆனாலும்… அரசியல்வாதிகள் நல்லா ‘அறுவடை’ செஞ்சுக்கிட்டேதானே இருக்காங்க சார்..?
தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைந்துவிடுவார்! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதுக்கு முன்னாடியே பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து விடுமாண்ணே?
புதிய இந்தியாவை கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது! – பிரதமர் மோடி!
மறுபடியும் முதல்ல இருந்தா?