கொள்முதல் நிறுத்தம்: 900 குவிண்டால் பருத்தி தேக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் நிறுத்தத்தால் 900 குவிண்டால் பருத்தி தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள முட்டக்குடி, சிற்றிடையாநல்லூர், மணிக்குடி, கட்டாநகரம், அணைக்கரை, சாத்தனூர், தத்துவாஞ்சேரி, பட்டம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பனந்தாள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ரூ.1 கோடியே […]

தொடர்ந்து படியுங்கள்