தாண்டவம் – லாஸ்யம் – ஸ்ரீராம் சர்மா
ஸ்ரீராம் சர்மா பல விதமான கலாச்சாரங்களைத் தன்னுள்ளடக்கிப் பரந்து விரிந்த இந்த பாரதத் திருநாட்டில் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனித் தனியே சில குண விசேஷங்கள் உண்டு. அதனதன் வெளிப்பாடாகவே அந்தந்த மண்ணின் இயல், இசை, நாட்டியக் கலை வடிவங்கள் அனைத்தும் தோன்றிவந்திருக்கின்றன. நமது நாட்டில் கதக், கதக்களி, ஒடிசி, குச்சுப்டி, சாத்ரியா, மணிப்புரி, கூமர், யக்ஷகானா, விலாஸினி நாட்டியம், கௌடிய நிருத்யா, சம்பல்புரி, மோகினியாட்டம் எனப் பலவகையான நாட்டிய வடிவங்கள் இருந்தாலும், நமது தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில்…