’’தோனியை அழவைத்த சென்னை அணி”: மனம் திறந்த ஹர்பஜன் சிங்

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், “ இரவு நேர உணவுக்காக நான் அனைவரும் குழுமியிருந்தோம். பொதுவாக ஆண்கள் அழுவதில்லை என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அன்று இரவு தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். யாருக்கும் அது தெரியாது” என்று சொன்ன ஹர்பஜன் சிங் மற்றொரு வீரரான இம்ரான் தாஹிரிடம் நான் சொல்வது சரிதானே தாஹிர் என்று கேள்வி எழுப்ப…ஆம் என தெரிவித்த தாஹிர்”நானும் அங்கு இருந்தேன். அவரைப்பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தோனியை அப்படி பார்த்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் உணர்ந்தேன். அவர் அந்த அணியை தன்னுடைய குடும்பத்தை போல் கருதுகிறார். அந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமான தருணமாக காணப்பட்டது” என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புற்று நோயுடன் விளையாடிய யுவராஜ்: ஹர்பஜன் உருக்கம்!

தொடர்ந்து பேசிய அவர், “நமது அணியின் மருத்துவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக யுவராஜ் சிங்கிற்கு சரியாக தூக்கம் வரவில்லை என்பதனால் தூக்க மாத்திரை வழங்க சென்றுள்ளார். ஆனால் யுவராஜ் சிங் அவரிடம் …’அந்த கடவுள் என்னிடம் இருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், உயிர் கூட போகட்டும்…வலியை கொடுக்கட்டும், ஆனால் எங்களுக்கு உலகக் கோப்பையை கொடுத்தால் போதும் என்றும்
நான் இறுதிப் போட்டியில் விளையாடிய பின்னர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று யுவராஜ் சிங் கூறியதை உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார் ஹர்பஜன் சிங்.

தொடர்ந்து படியுங்கள்

டிராவிட் வேண்டாம்: பயிற்சியாளரில் மாற்றம் வேண்டும்…ஹர்பஜன் சிங் கோரிக்கை!

போற்றப்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஐடியா இல்லாத அவருக்கு பதிலாக விரேந்தர் சேவாக் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அவரிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்: ஹர்பஜன் சிங்

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘கிரிக்கெட் லைவ்’ நிகழ்ச்சியில் பேசிய அவர் “ராகுல் டிராவிட் உடன் நான் ஒத்துப் போகிறேன். ஏனெனில் அவருக்கு ரிஷப் பண்ட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை பொருத்தவரை தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் தான் நான் தினேஷ் கார்த்திக்கை மிகவும் ரசிக்கிறேன். எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்ற போன்றோரால் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

கே.எல்.ராகுலுக்கு பதில் ரிஷப்புக்கு வாய்ப்பு கொடுக்கலாம்: ஹர்பஜன் சிங்

இது பற்றி ஹர்பஜன் சிங் நேற்று (அக்டோபர் 30 ) பேசியபோது ’இந்தத் தொடரில் வெற்றிகரமாக முன்னோக்கி செல்வதற்கு இந்திய அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கே.எல் ராகுல் சிறந்த வீரர் என்பதையும் மேட்ச் வின்னர் என்பதையும் நாம் அறிவோம்’.’ஆனால் இதே பார்மில் தொடர்ச்சியாக அவர் தடுமாறினால் நீங்கள் ரிஷப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதே சமயம் தினேஷ் கார்த்திக் காயம் பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் குணமடையாவில்லை என்றால் ரோகித் சர்மாவுடன் ரிசப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கலாம்.அதனால் உங்களுக்கு ஓப்பனிங்கில் வலது – இடது கை பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும் தீபக் ஹூடாவை நீங்கள் அணியில் சேர்க்கலாம். ஆனால் அவருக்கு ஒரு சில ஓவர்கள் பந்து வீச வழங்க வேண்டும்’ என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்!

நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின், 18-வது ஓவரில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்