”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி அந்த விருதை பெற்றார்.