திருமண நிகழ்வில் ரூபாலி அசாம் மாநிலத்தின் பிரத்யேக பட்டுத் துணியாலான வெள்ளை மற்றும் தங்கநிற மேகேலா சடோர் அணிந்திருந்தார். ஆஷிஷ் வித்யார்த்தி கேரளாவின் முண்டு அணிந்திருந்தார்.தனது 60-வது வயதில் இரண்டாவதாக திருமணம் குறித்து வித்யார்த்தி கூறும்போது, “எனது வாழ்வின் இந்த நிலையில் ரூபாலியை திருமணம் செய்திருப்பது அசாதரணமான உணர்வினைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்வு நடந்தது” என்றார். தொடர்ந்து தனது ரசிகர்களுக்கான செய்தியாக, “சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட நாங்கள் இருவரும், எங்கள் உறவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம். ஆனாலும் எங்களின் திருமணம் சிறிய குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்” என்று தெரிவித்துள்ளார். ரூபாலி தொழில்முனைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்