‘செக்யூலர்’ ‘சோஷலிஸ்ட்’ ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களா?

“அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை இந்திய மதிப்பீடுகளுக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ ‘சோசலிசம்’ ஆகியவை ஏன் சேர்க்கப்பட்டன ? “ என்று பாஜகவின் மேனாள் பொதுச்செயலாளர் கோவிந்தாச்சார்யா 2017 இல் ஒரு பேட்டியில் கேட்டார் ( National Herald , 02.10.2017). இன்றைய பாஜகவினரும் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பொருத்தமான பதிலைத் தீர்ப்பாகக் கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Medical education and NEET scam

மருத்துவக் கல்வியும் நீட் தேர்வு எனும் மோசடியும்!

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அது தொடர்பான விசாரணையை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் மத்திய புலனாய்வுக் குழுவிடம் ( சிபிஐ) ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த முயற்சிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

எம்.சி.ராஜா : சட்டமன்றத்தில் சமத்துவத்துக்காக ஒலித்த முதல் குரல்!

“ மக்கள் தன்னை ஆதரிப்பார்களா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று அச்சப்படாமல் ஆதாயம் கருதாமல் எடுத்துச் சொல்லும் ஒருவரைத்தான் தலைவர் என்று நான் கருதுகிறேன்” என அண்ணல் அம்பேத்கர் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரம் உயர்வதற்கான வழிகள்

உலக அளவில் உயர் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும்போது அதில் இந்தியாவைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் பல இடம்பெற்றுள்ளன. அவ்வாறு இடம் பெற்றிருப்பவை பெரும்பாலும் அரசாங்கக் கல்வி நிறுவனங்கள்தாம்.

தொடர்ந்து படியுங்கள்
Does the farm labourer get a Salvation?

விவசாயத் தொழிலாளர்களுக்கு விடிவுகாலம் வருமா?

விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவர்களையே அது குறிக்குமென்று பொதுப்புத்தியில் பதிந்துபோயுள்ளது. நிலத்தில் வேலைசெய்து விளைவிக்கும் தொழிலாளர்களை எவரும் விவசாயி என எண்ணுவதில்லை. நிலம் வைத்துள்ள விவசாயிகள்தான் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக முடியும், கடன்பெற முடியும். விவசாயத்துக்கென பொதுத்துறை வங்கிகளால் கொடுக்கப்படும் கடன்களையும் அவர்களே பெற முடியும். பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் நிலம் வைத்திருந்தால்தான் பதிவுசெய்துகொள்ள முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

வட இந்தியாவும் தமிழ்நாடும்: சில வரலாற்றுக் குறிப்புகள்!

வட இந்தியாவும் தமிழ்நாடும் பண்புரீதியாக வேறுபட்ட அம்சங்கள் கொண்ட பகுதிகளாக உள்ளன என்ற கூற்று இப்போது ராகுல் காந்தி முதலான அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நேருவும் அம்பேத்கரும்

நேரு-அம்பேத்கர் உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்த புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை. இது ஒரு பரிதாபமான விஷயம், ஏனென்றால் முக்கியமான காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் ஒன்றாக வேலை செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் நிர்வாக சிக்கலாக மொழிவாரி மாநில உருவாக்கப் பிரச்சனையைக் குறிப்பிடலாம். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற ஆலோசனை 1928 ஆம் ஆண்டு நேரு தலைமையிலான கமிட்டியால் முன்வைக்கப்பட்டபோதிலும் சுதந்திரத்துக்குப் பிறகு அதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தவில்லை. 1948 ஜூன் 17ஆம் தேதி நியமிக்கப்பட்ட தார் கமிஷன், மாநிலங்களை மொழியின் அடிப்படையில் அமைப்பது நல்லதல்ல என்று நிராகரித்தும்கூட அதற்கொரு காரணம் எனக் கூறலாம்.

தொடர்ந்து படியுங்கள்
From Coalition to Federalism

கூட்டணி ஆட்சியிலிருந்து கூட்டாட்சிக்கு: முதலமைச்சரின் ‘போட்காஸ்ட்’ உரை குறித்து சில குறிப்புகள்!

“மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்து தமிழ்நாட்டின் குரல்” என்னும் தலைப்பில் இன்று (30.10.2023) தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘போட்காஸ்ட்டில்’ உரையாற்றியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்