சிறப்புப் பத்தி: காலனியமும் சேவை நிறுவனங்களும்!

தன்னார்வ நிறுவனங்களும் ஹைதிக்கு உதவி செய்யப் பெருமளவில் முன்வந்தன. பிரிட்டனில் மட்டும் 107 மில்லியன் பவுண்டுகள் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது. அமெரிக்காவில் தனவந்தர்களுடைய நிறுவனங்கள், உதாரணமாக ராக்கெஃபெல்லர், பில் கேட்ஸ், ஃபோர்டு, பின்னர் கூகுள் போன்றவை, சமூகச் சேவைகளுக்குப் பணம் கொடுப்பது சாதாரணமானதாகும். ஆனால், பிரிட்டனில் பேரிழப்பு, மருத்துவ இடர் போன்ற துயரங்களுக்கு மக்களிடமிருந்து பணம் திரட்டப்படுவது முக்கியச் சமூக நிகழ்வாகும். பிரிட்டனில் உள்ள பிபிசியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை காமிக் ரிலீஃப் (comic relief) என்ற சேவை நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பணம் திரட்டிவருகிறது.

தொடர்ந்து படியுங்கள்