சின்ன சின்ன கண்கள் : பவதாரிணி குரலில் உருவானது எப்படி?
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘GOAT’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI)…