2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : கடகம்!
-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! கடகம்தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு. மனதில் இருந்த இனம்புரியாத பயங்கள் நீங்கும். கவனச் சிதறல் தவிர்த்து கடமை உணர்ந்து செயல்பட்டால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்….