தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம், அமைப்புச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் இன்று(மே19) கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அதில், “பாரதத்தை உலகின் வழிகாட்டியாக மாற்றுவதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து, கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கச் செய்து, தூய்மையான நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உறுதி ஏற்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்