பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் 12

இன்று பார் கவுன்சில் தேர்தல்… சுமார் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வாக்கு செலுத்த 55 ஆயிரம் வழக்கறிஞர்கள் தயாராகிறார்கள். எத்தனை மனுக்கள், எத்தனை வழக்குகள், எத்தனை அமர்வுகள். எத்தனை விசாரணைகள், எத்தனை ஆணைகள்… இத்தனையையும் தாண்டி இதோ இன்று தமிழ்நாடு வழக்கறிஞர் சமுதாயத்தின் அடுத்த சில ஆண்டுகளுக்கான தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்-10

பார் கவுன்சில் கட்சி அரசியலுக்கான இடமா? அல்லது வழக்கறிஞர்களுக்கானதா? பார் கவுன்சிலை அரசியல் கட்சிகளின் மேடையாக மாற்றினால் விளைவுகள் என்னென்ன? அப்படி தேர்வு செய்யப்படுவோர் வழக்கறிஞர்களின் உணர்வுகளை பார் கவுன்சிலில் பிரதிபலிப்பார்களா அல்லது தங்கள் அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்குச் செவிமடுப்பார்களா?

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்-7

பார் கவுன்சில் நிர்வாகம் என்ற உயரத்தில் புதிய வழக்கறிஞர்கள், புதிய சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், புதிய வெடிப்புகளை, புதிய தெறிப்புகளை உருவாக்கும் வழக்கறிஞர்கள் ஏறி வந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான்… ‘ பார் கவுன்சில் தேர்தலில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கக் கூடாது, வாக்குறுதிகள் வழங்கப்படக் கூடாது’ என்ற புதிய நிபந்தனைகளை திணிக்க வைக்கிறது. இதுவே பெரும்பாலான இளம் வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு.

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் 6

பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக நிர்வாகம் ஒரு சட்டம் போட, அதை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட… அநேகமாக இந்தப் போராட்டப் படலம் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தொடரும் போல.

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்- 5

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இப்போது பார் கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அந்தந்த மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘நான் பார் கவுன்சில் உறுப்பினர் ஆகும்பட்சத்தில், வழக்கறிஞர்களுக்கு இன்னின்ன நன்மைகளைச் செய்வேன், இன்னின்ன உரிமைகளை மீட்டுக் கொடுப்பேன், இன்னின்ன பிரச்னைகளைத் தீர்த்து வைப்பேன்’ என்று பரப்புரை செய்கிறார்கள், தங்கள் வாக்குறுதிகளை அச்சடித்து துண்டுப் பிரசுரம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் நீதிமன்ற வளாகங்களில்தான் செய்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சில் தேர்தல்: முட்டுக் கட்டைகள் முறிக்கப்படுமா? மினி தொடர் – 19

அகில இந்திய பார் கவுன்சில், தமிழக பார் கவுன்சில் இரண்டுமே தங்கள் பதவிக் காலத்தைத் தாண்டி இப்போது ஓவர் டைம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மீண்டும் மீண்டும் பார் கவுன்சில் தேர்தலுக்கு பல முட்டுக் கட்டைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இதுபற்றி நாம் மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில், ‘இருட்டறையில் ஒரு விளக்கு’ தொடரில் விளக்கமாகப் பார்த்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சில் தேர்தலில் கறை! மினி தொடர் – 18

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு நடத்த வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன். அதோடு, பார் கவுன்சில் தேர்தலைத் தாமதப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 22

“வழக்கறிஞர்கள் என்ற சமுதாயம் ஒரு போராளிச் சமுதாயம். நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் அதில் வழக்கறிஞர்களே முன்னால் நிற்கிறார்கள். வெள்ளையர் அரசின் சட்டங்களை அஹிம்சையாக எதிர்த்து நம் நாட்டின் தேசத் தந்தையாக விளங்கும் மகாத்மா காந்தியும் வழக்கறிஞர்தான். எத்தனையோ வழக்கறிஞர்கள் போராட்டக் களத்தின் முன்னத்தி ஏராய் விளங்கியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 23

காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நிலவும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்தந்த நகரம், மாவட்டம் என மாநில அளவு வரை நீதிபதி தலைமையில் காவல் துறையினர், வழக்கறிஞர் சங்கத்தினர் உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்களை அமைத்து, இந்த நீண்ட கால நெருப்பை அணைக்க ஆக்கபூர்வமாகப் பணியாற்றினார் முன்னாள் பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகன். அது பற்றி அவர் விரிவாகப் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 24

காவல் துறை – வழக்கறிஞர்கள் மோதல் என்பது ஏதோ இலங்கை பிரச்னை மாதிரி நீண்டுகொண்டே இருக்கிறது. இரு தரப்பிலுள்ள பலரும் இந்த மோதலை கூர்தீட்டும் வகையில்தான் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர பலரின் சிந்தையில் செயல் திட்டமும் இல்லை, விருப்பமும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்