டாப் 10 நியூஸ் : விஜய் அவசர ஆலோசனை முதல் வெற்றியை நோக்கி இந்தியா வரை!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளின் அவசர கூட்டம் இன்று (நவம்பர் 3) பனையூரில் நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளின் அவசர கூட்டம் இன்று (நவம்பர் 3) பனையூரில் நடைபெறவுள்ளது.
அதிமுகவை சேர்ந்த 40 MLA-க்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதை விரும்பவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ‘with hold’ என்று குறிப்பிட்டு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு அர்த்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிராகரிக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாங்குநேரி சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவரின் அறுவைசிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் குழு நெல்லைக்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.