இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “ரேசன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம். ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, அனைத்து கடைகளிலும் செப்டம்பர் 30 வரை 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம். 2,000 ரூபாய் நோட்டு பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கூட்டுறவு வங்கிகளிலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்