வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறுகிறது. இதில் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்பின்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரையும் (2-1) என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறும் 5 போட்டிகளை கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை நேரடியாக எதிர்கொள்கிறது.
அதன்படி, இந்த தொடரில் இந்திய அணியின் 50 ஓவர் போட்டிகளின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துவார். மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது வீரராக திலக் வர்மா 4-வது வீரராக யாஜஸ்வி ஜெய்ஸ்வால் 5-வது வீரராக அக்சர் பட்டேல் ஆகியோரும் 6-வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்க கூடும்.
7-வது இடத்தில் இஷான் கிசன் , 8-வது இடத்தில் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 9-வது இடத்தில் குல்திப் யாதவ் 10-வது இடத்தில் ஆவேஷ் கான் 11-வது இடத்தில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. இப்படி இளம் வீரர்களுடன் களம் இறங்கும் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி சமாளிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிறப்பு விசாரணை குழு வேண்டும்: சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!
கிச்சன் கீர்த்தனா: கீரை வெஜ் ஆம்லெட்