வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்பின்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரையும் (2-1) என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற 5 போட்டிகளை கொண்ட இருபது ஓவர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை நேரடியாக எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரன்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
அதில் அதிரடியாக விளையாடிய பிரன்டன் கிங் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என் மொத்தம் 28 ரன்கள் எடுத்தர். மறுபுறம் கைல் மேயர்ஸ் 7 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக வந்த நிகோலஸ் பூரனும், கேப்டன் ரோமன் பவெலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.
அதன்படி, அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 34 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 41 ரன்களை குவித்தார்.
மறுபுறம் கேப்டன் ரோமன் பவெல் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 48 ரன்களை குவித்தார்.
இவ்வாறாக 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பின்னர், 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
அதன்படி, இஷான் கிஷன் 6 ரன்கள், சுப்மன் கில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 21 ரன்களும், திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் , 3 சிக்ஸர்கள் என மொத்தம் 39 ரன்களை குவித்தார்.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
WI vs IND: திலக் வர்மா அதிரடி வீண்- இந்திய அணி தோல்வி!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்: காரணம் என்ன?