T20 worldcup 2022: தென்னாப்பிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?

T20 விளையாட்டு

தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டி இன்று (நவம்பர் 3) சிட்னியில் நடைபெறவுள்ளது.

2022 ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு

பாகிஸ்தான் அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

pakistan vs south africa super 12 match held today in sydney

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப் 2 புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் மோசமான இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியுடனான இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதோடு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள வங்காள தேச அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்.

அதுமட்டுமின்றி, மற்ற அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தான் அணிக்குச் சாதகமாக அமைய வேண்டும்.

அதாவது தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு போகமுடியும். அதுபோன்று இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைத் தழுவினால் அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லும்.

தென்னாப்பிரிக்கா அணி

தென்னாப்பிரிக்கா அணி இந்தியா, வங்காள தேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு போட்டி மழை காரணமாக தடைபட்டது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா இந்திய அணியுடன் விளையாடிய தனது முந்தைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் இந்திய வீரர்களைத் திணறடித்தது.

pakistan vs south africa super 12 match held today in sydney

விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடிய இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆகையால் இன்றைய போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு இன்றைய போட்டி வாழ்வா சாவா ஆட்டம் போன்றது. இதனால் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் போட்டிகள் நடைபெறும்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் பாகிஸ்தானும் 10-ல் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன.

மோனிஷா

குஜராத் தேர்தல்: இன்று அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை: அரையிறுதியை நெருங்கிய இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0