2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் கேரளாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி அதிக ரசிகர்களைக் கொண்டதாகும். அந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஐபிஎல் 16ஆவது தொடர் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் தொடங்கவுள்ளது.
கடந்த 15ஆவது தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் நவம்பர் 13 முடியும் நிலையில், இந்த டி20 உலகக் கோப்பையில் வீரர்கள் ஆடுவதைப் பொறுத்து அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் முன்பைவிட கூடுதல் தொகை அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால், கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது.
ஜெ.பிரகாஷ்
சீராய்வு மனுவுக்காக அனைத்து எம்.எல்.ஏக்களுடனும் ஆலோசனை-சேகர்பாபு
பண மதிப்பிழப்பு வழக்கு: நவம்பர் 24 விசாரணை!