ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கிடையே இன்று (அக்டோபர் 28) நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுப் போட்டி மழை காரணமாக டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிக்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இதனால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதவிருந்த சூப்பர் 12 சுற்றுப் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கவிருந்தது.
ஆனால் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை முடிந்த பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மழை விடாமல் பெய்து வந்ததால் டாஸ் கூட போடாமல் போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் 12 புள்ளி பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
T20 WorldCup 2022 : கடைசி பந்தில் சொதப்பிய பாகிஸ்தான்… த்ரில் வெற்றி பெற்ற ஜிம்பாவே!
பாஜக பந்த்துக்கு எதிராக வழக்கு!