டி20 உலகக்கோப்பை போட்டியில் குரூப் 1இல் நியூசிலாந்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, அரையிறுதியை நோக்கி வேகம் பிடித்துவருகின்றன.
அந்த வகையில், குரூப்1ல் இங்கிலாந்து-இலங்கை அணிகள் இன்று (நவம்பர் 5) சிட்னியில் களம் கண்டன.
இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்குச் செல்லலாம் என்ற நிலை இருந்தது.
அதேநேரத்தில் தோல்வி அடைந்தால் வெளியேற வேண்டியதுதான். இதையடுத்து, இன்று விளையாடிய போட்டியில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி அவ்வணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் நிசாங்கே அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார்.
ராஜபக்ஷே 22 ரன்களும், மெண்டிஸ் 18 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்து அரையிறுதிக்குள் நுழைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹேர்லெஸ் 47 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். பட்லர் 28 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் ஹசாரங்கா, குமாரா, டிசில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. மேலும், அவ்வணிக்கு எதிராக அரையிறுதி கனவில் நின்ற நடப்பு சாம்பியனும், இந்த உலகக் கோப்பையை நடத்தும் அணியான ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது.
ஜெ.பிரகாஷ்
கிரிக்கெட் சங்கத் தேர்தல்: அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு!