T20 World Cup 2022 : வெற்றியைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து

Published On:

| By Prakash

டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று (அக்டோபர் 19) நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது.

அவ்வணியில் ஜான்சன் சார்லஸ் அதிகபட்சமாக 45 ரன்களும் ரோவ்மன் பவெல் 28 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் நிலைகுலைந்தது. அவ்வணியின் அல்ஜாரி ஜோசப் துல்லியமான யார்க்கரில் முக்கிய விக்கெட்டுகளை காலி செய்தார்.

64 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய ஜிம்பாப்வே அணியால் அதன் பிறகு சரிவில் இருந்து மீள முடியவில்லை.

18.2 ஓவர்களில் அந்த அணி 122 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோற்றிருந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது முதலாவது வெற்றியாகும்.

டி20 உலகக் கோப்பையின் மற்றொரு ஆட்டத்தில், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கெல் ஜோன்ஸ் 86 ரன் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டும், மார்க் அடாய்ர், ஜோசுவா லிட்டில் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடிய காம்பர் தனது முதல் அரைசதம் அடித்து அசத்தினார்.

அந்த அணி தரப்பில் கார்டிஸ் கேம்பர் 72 ரன்னும், டாக்ரெல் 39 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் மூலம் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஜெ.பிரகாஷ்

”ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியம் என்றவர் ஓபிஎஸ்” – ஜேசிடி பிரபாகர்

அசோக் கெலாட் vs சச்சின் பைலட்: கார்கே யாருக்கு ஆதரவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share