டி20 உலக கோப்பையில் வென்றால்… பாகிஸ்தான் அறிவித்த பரிசு!

Published On:

| By Selvam

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ.83 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை போட்டி ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அனைத்து நாடுகளும் டி20 உலக கோப்பை போட்டிக்கான அணி வீரர்களை அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணியில், அப்ரர் அகமது, அசாம் கான், ஃபகர் சமாம், ஹரிஸ் ரவுப், ஹாசன் அலி, இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், முகமது இபான் கான், நசீம் ஷா, நசீம் அயூப், சல்மான் அலி அகா, ஷாதப் கான், ஷாகீன் ஷா அஃப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி நேற்று விருந்து ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வீரர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது வீரர்கள் மத்தியில் பேசிய மோஷின் நக்வி, “யாரையும் பற்றி கவலைப்படாதீர்கள். பாகிஸ்தான் அணி வெற்றியில் மட்டும் தனி கவனம் செலுத்தி விளையாடுங்கள்.

அனைவரும் ஒற்றுமையாக விளையாடுங்கள். கோப்பை நமக்குத்தான். பாகிஸ்தான் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. பாகிஸ்தான் கொடியை இறுதிப்போட்டியில் நீங்கள் பறக்கவிடுவீர்கள். பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.83 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்,

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? – காரணம் என்ன?

ஜார்க்கண்ட் அமைச்சரின் தனிச்செயலாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: ED வெளியிட்ட வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share