டி20 உலகக்கோப்பையில் நியூயார்க் மைதானத்தின் மைனஸ் பற்றி தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கான போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதற்கான லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு உள்ளதால் லீக் போட்டிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரில் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், புதிய அணிகளின் எழுச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் ஒவ்வொரு லீக் போட்டியையும் காண 36 ஆயிரம் ரசிகர்கள் வருகிறார்கள். அதிலும், வங்கதேசம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூயார்க் போன்ற அணிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் புதிய வணிகத்தை ஐசிசி தொடங்கி உள்ளதாக கருத்துகள் வெளிவருகின்றன. இருந்தபோதும், லோ-ஸ்கோரிங் மற்றும் த்ரில்லர் போட்டிகள் சில பின்னடைவை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
ஏனெனில், நியூயார்க் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் எந்த ஒரு அணியும் 140 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஹென்ரிச் கிளாசன் பேசியதாவது, “தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுபோன்ற லோ-ஸ்கோரிங் ஆட்டங்கள் மிகவும் பிடிக்கும்.
நியூயார்க் மைதானத்தில் உள்ள பிட்சுகள் சரியான வகையில் இல்லை. தொடக்கம் முதலே டி20 போட்டிகளை காணும் ரசிகர்களுக்கு தற்போது நியூயார்க் நகரில் நடைபெறும் போட்டிகள் மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது உள்ள ரசிகர்களுக்கு லோ-ஸ்கோரிங் எந்த வகையில் பிடிக்கும் என எனக்கு தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படுவதால், போட்டிகள் வெகு விறுவிறுப்பாக இருக்கும். இதைத் தான் இப்போது உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால், அவர்களுக்கு தற்போதைய டி20 லீக் போட்டிகள் எந்தளவு பிடிக்கும் என்பது கேள்விக்குறிதான்.
டி20 உலகக்கோப்பைக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், வியாபார ரீதியாக பார்த்தோம் என்றால், இந்த மாதிரியான லோ-ஸ்கோரிங் ஆட்டத்துக்கான மைதானங்கள் சரிப்பட்டு வராது” என்று தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘நெகடிவ்’ கேரக்டரில் விஜய் அசத்திய ‘பிரியமுடன்’!
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!