டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று (மே 27) நியூயார்க் சென்றுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியாவில் ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வந்ததால், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் முன்னதாகவே அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாத ஐபிஎல் அணிகளில் உள்ள இந்திய அணி வீரர்கள் உள்ளிட்டோர் முதல்கட்டமாக அமெரிக்கா செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்தது.
அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான வீரர்கள் இன்று காலை நியூயார்க் சென்றடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரதோர், வீரர்கள் அக்சார் பட்டேல், முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், ரோகித் சர்மா, ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.
இந்திய அணி விளையாடும் முதல் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் தான் நடைபெறுகிறது. அந்த போட்டிகளில் முதல் 3 போட்டிகள் நியூயார்க்கிலும், ஒரு போட்டி லாடர்ஹில்லிலும் நடைபெறுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொதிக்கும் சூரியன்… கதிகலங்கும் மக்கள்… வானிலை மையம் அலர்ட்!
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பறிபோன 2000 உயிர்கள்… ‘அத்திப்பட்டி’யான கிராமம்!