டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை: இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது?

Published On:

| By Manjula

t20 world cup 2024 schedule

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2024 -ம் ஆண்டு, டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. t20 world cup 2024 schedule

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும்,

பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

t20 world cup 2024 schedule

பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்றின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு  இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் மோதும் 4 அணிகளில், இறுதிப்போட்டிக்கு இரண்டு அணிகள் முன்னேறும்.

t20 world cup 2024 schedule

இறுதிப்போட்டியில் நன்றாக விளையாடும் அணி டி2௦ உலகக்கோப்பை தொடரை வென்று, சாம்பியனாக மகுடம் சூட்டிக்கொள்ளும்.

இதில் டி20 தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது.

t20 world cup 2024 schedule

 

குரூப் சுற்றில் இந்திய அணியின் போட்டி அட்டவணை:

*ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து.

*ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான்.

*ஜூன் 12 – இந்தியா- அமெரிக்கா.

*ஜூன் 15 – இந்தியா – கனடா.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27-ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி ஜூன் 29-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்திய அணி விளையாடும் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநாடு?

ஸ்டிரைக் முடிவு தொடரும் : போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

t20 world cup 2024 schedule

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share