IND vs IRE: ஹர்திக் பாண்டியா மிரட்டல்… இமாலய வெற்றி பெற்ற ‘இந்தியா’!

Published On:

| By christopher

T20 World Cup 2024: 2024 டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஜூன் 2 அன்று துவங்கிய நிலையில், இந்தியா ஜூன் 5 அன்று தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ADVERTISEMENT

இதை தொடர்ந்து, ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே மிரட்டலான பந்துவீச்சு மூலம், இந்திய பவுலர்கள் அயர்லாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்தனர்.

3வது ஓவரிலேயே, பால் ஸ்டிர்லிங் & ஆன்ட்ரூ பில்பர்னி என 2 துவக்க ஆட்டக்காரர்களையும் அர்ஷ்தீப் சிங் ஃபெவிலியனுக்கு அனுப்பினார்.

ADVERTISEMENT

IND vs IRE, T20 World Cup 2024: Arshdeep Singh Eclipses Jasprit Bumrah in Terms of Wickets in Powerplay - myKhel

இதன் காரணமாக, பவர்-பிளே முடிவில் அந்த அணி 26 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

ADVERTISEMENT

பின் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் வேகத்தில் சிக்கி, அந்த அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து அயர்லாந்து 46 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அடுத்து வந்த கரீத் டெலனி மட்டும் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 26 ரன்கள் சேர்க்க, மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக, அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவுக்காக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

97 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி, இந்தியாவுக்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஒரு புறத்தில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை துவங்க, மறுபுறத்தில் விராட் கோலி 1 (5) ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட்டுடன் இணைந்து, மிக சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 52 (37) ரன்கள் சேர்த்திருந்தபோது ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில், பண்ட் 26 பந்துகளில் 36 ரன்கள் விளாசி இருக்க, 13வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவுக்காக, 1 மெய்டன் ஓவர் உட்பட 3 ஓவர்களை வீசி, வெறும் 6 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றிய பும்ரா, ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ராஜினாமா செய்யப் போறேன்” : அண்ணாமலை பரபரப்பு!

ஹெல்த் டிப்ஸ்: ஆஸ்துமாவுக்கு எந்தவிதமான சிகிச்சையை எடுத்துக்கொள்கிறீர்கள்?

பியூட்டி டிப்ஸ்: உடல்பருமனைப் பற்றி கவலைப்படாதவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் வரை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share