20 பைசாவுக்கு வங்கிக் கணக்கு விவரம் விற்பனை!

Published On:

| By Balaji

ஒருவரின் வங்கிக் கணக்கு 10 முதல் 20 பைசா என்ற விகிதத்தில், சுமார் ஒரு கோடி வங்கிக் கணக்குகளை விற்பனை செய்து பணமோசடி செய்ய முயற்சித்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில், தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியின் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.1.46 லட்சம் திருடு போனது. இந்த வழக்கில், வங்கியாளர் ஒருவர் அந்த மூதாட்டியின் வங்கிக் கணக்கு விவரங்களை விற்பனை செய்தது காவல் துறை விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுபற்றி டெல்லி தென்கிழக்குப் பிரிவு காவல் துறை துணை ஆணையர் ரோமில் பானியா கூறுகையில், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பண்டவ் நகரைச் சேர்ந்த பூரன் குப்தா என்ற முக்கிய நபரை கைது செய்தபோது, அவரிடமிருந்து 20 ஜிகா பைட் டேட்டா அளவிலான, மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களை கைப்பற்றினோம். அந்த டேட்டாவில் வங்கிக் கணக்காளரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, மொபைல் எண், கார்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியிருந்தன.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட பூரன் குப்தா, இந்த டேட்டாக்களை மும்பையைச் சேர்ந்த ஒரு சப்ளையரிடம் 50,000 வங்கிக் கணக்காளர்களின் விவரங்களை ரூ.20,000 வரை கொடுத்து வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த விவரங்களை இவனிடமிருந்து பெறும் பண மோசடி (திருட்டு) கும்பல், வங்கியில் பணிபுரிபவர்போல வேடமிட்டு, அவ்வங்கிக்கு வரும் நபர்களிடம் கார்டுகளின் ஓ.டி.பி., சி.சி.வி, PIN நம்பர் ஆகியவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டு பணத்தை திருடுகிறார்கள். இந்த கும்பலை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளோம்’ என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share