10 % உயர்ந்த ஆன்லைன் ஆள் சேர்ப்பு!

Published On:

| By Balaji

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக பணிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மான்ஸ்டர்.காம் இணையதளம் ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வாயிலாக பணிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக ஆட்சேர்க்கும் நடவடிக்கை ஒட்டுமொத்தமாக 10 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, வங்கி, நிதிச் சேவை மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் ஆட்சேர்க்கும் நடவடிக்கை 31 சதவிகிதம் உயர்ந்துள்ளது. முந்தைய மார்ச் மாதத்தில் அது 24 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக ஆன்லைன் வாயிலாக ஆள் சேர்த்த நகரங்களில், 28 சதவிகித வளர்ச்சியுடன் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக பரோடா 27 சதவிகிதமும், மும்பை 6 சதவிகிதமும் அதிகமாக, ஆன்லைன் வாயிலாக பணியில் சேர்த்துள்ளனர். ஆனால், டெல்லியில் 4 சதவிகிதமும், பெங்களூருவில் ஒரு சதவிகிதமும் ஆன்லைன் ஆட்சேர்ப்பு நடவடிக்கை சரிந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைத் துறையில் ஆள் சேர்ப்பு நடவடிக்கை 26 சதவிகிதமும், மருத்துவம் மற்றும் போக்குவரத்துத் துறையில் 6 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share