‘நம்பர் ஒன்’ இடத்தில் ரேஷ்மிகா

Published On:

| By Balaji

கன்னடத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை ரேஷ்மிகா மண்டானா பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகை விட குறைவான மார்கெட்டை கொண்டது கன்னடத் திரையுலகம். எனவே நடிகர் நடிகைகளின் சம்பளமும் மற்ற திரையுலகை விட அங்கு குறைவானதாகவே உள்ளது.

ADVERTISEMENT

2010 ஆம் ஆண்டு ‘சூப்பர் ’ படத்தில் நடித்ததற்காக நயன்தாரா பெற்றதே கன்னடத் திரையுலகில் ஒரு நடிகையின் அதிகபட்ச சம்பளமாக இருந்தது. அதன் பின் ஏமி ஜாக்சன் ‘தி வில்லன்’ படத்திற்காக பெற்ற தொகை கன்னட நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது ரேஷ்மிகாவின் மேல் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது.

2016ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரேஸ்மிகா மண்டானா . முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதும் அடுத்தடுத்து இரு கன்னடப் படங்களில் நடித்தார்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு நாக சௌரியா உடன் இணைந்து நடித்த சலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. தொடர்ந்து ரேஷ்மிகா நடிப்பில் வெளியான தேவதாஸ் படமும் வசூல் சாதனை நிகழ்த்தத் தவறவில்லை.

தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளிலும் முக்கியமான படங்களை கைவசம் வைத்துள்ள ரேஷ்மிகா தற்போது கன்னடத்தில் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘பொகரு’. துருவா சர்ஜா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிப்பதற்காக ரேஷ்மிகாவுக்கு 64 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே கன்னடப் படம் ஒன்றிற்காக ஒரு நடிகை பெறும் அதிக பட்ச சம்பளமாகும்.

ADVERTISEMENT

நந்தா கிஷோர் இயக்கும் இந்த படத்தில் ஷன்வி ஸ்ரீவஸ்டவா இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுதவிர ரேஷ்மிகா நடிப்பில் தற்போது டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படம் தயாராகிவருகிறது. கன்னடத்தில் நடித்துள்ள எஜமானா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share