3 லட்சம் துணை ராணுவத்தினரும், 20 லட்சம் மாநில காவல் துறையினரும் 7 கட்ட தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைகள் முழுமையாக வெளியாகும் வரையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும். இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அதிகபட்ச அளவில் பாதுகாப்புப் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மே 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300 கம்பெனி துணை ராணுவப் படையைச் சேர்ந்த 3,00,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி மாநில ஆயுதப்படை, இந்திய ரிசர்வ் பட்டாலியன், பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட 20 லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களையும் சேர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநில காவல் படையில் ஒட்டுமொத்தமாக 21 லட்சம் பேரும், மத்திய துணை ராணுவப் படையில் 10 லட்சம் பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://minnambalam.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://minnambalam.com/k/2019/05/19/38)
**
.,”





