தமிழகத்தில் காலியாக உள்ள 15,000 சீருடை பணியாளருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (மே 21) நடைபெறுகிறது.
தமிழகத்தில் சீருடை பணியாளருக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள், தீயணைப்பு காவலர்கள் என மூன்று பிரிவிலும் 15 ,000 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 410 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இத்தேர்வை ஒன்றரை லட்சம் பெண்கள், 50 மூன்றாம் பாலினத்தவர் உட்பட ஆறரை லட்சம் பேர் எழுதி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெறும் தேர்வு இதுவாகும்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெறும் சீருடை பணியாளருக்கான இரண்டாம்நிலை காவலர் தேர்வைக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார்.
