காமன்வெல்த்: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்!

Published On:

| By Balaji

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் மூன்று பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளனர்.

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றன. நேற்று (நவம்பர் 3) நடைபெற்ற 50 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் 41 வயதான பிரகாஷ் நஞ்சப்பா 222.4 புள்ளிகள் பெற்றுத் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதே பிரிவில் இந்தியாவின் சக வீரர்களான அமான்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கமும், ஜித்து ராய் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.

ADVERTISEMENT

ஆண்களுக்கான டபுள் டிரேப் பிரிவில் இந்திய வீரர் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதேபோன்று ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் பிரோன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சுரேஷ் குசாலே மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ADVERTISEMENT

முன்னதாக ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் இந்திய வீரர்கள் ரிஸ்வி, ஓம்கார், ஜித்து ராய் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது 50 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் மூன்று பதக்கங்களையும் வென்று, இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைத் தொடர்கின்றனர்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share