பெல்ஜியம் நாட்டில் தாக்குதல் நடைபெற்ற பிரஸ்ஸெல்ஸ் நகருக்கு சென்ற மோடி இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கூக்குரல் எழுப்பிய போதெல்லாம், உலகம் அதை இந்தியாவின் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றது.
கடந்த ஆண்டு மட்டும் 90 நாடுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகின. இப்போதுதான் உலகிற்கு, இந்தியாவின் குரல் புரிகின்றது. இதைத் தடுப்பதற்கு முதலில் பயங்கராவதத்தை ஊக்குவிக்கும் நாடு எது, எது பயங்கரவாத, யார் பயங்கரவாதி என நாம் வரையரை செய்யவேண்டும். பயங்கரவாத்தை தடுப்பதில் ஐ.நா தோல்கியடைந்துவிட்டது. பயங்கரவாதத்தை வேரறுக்க ஐ.நா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் காலதாமதம் செய்தால் ஐ.நா தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்க நேரிடும்” என்று பேசினார்.
பின்னர், பெல்ஜியம் பயணத்தை முடித்துக்கொன்டு மோடி வாஷிங்டன் சென்றார். அங்கு ‘கருந்துளை ஈர்ப்பலைகளை’ பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ‘லிகோ’ ஆய்வு மையத்தை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடி முன்னிலையில், இந்திய அணுசக்தித் துறை செயலர் சேகர் பாசு, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் கோர்டுவா ஆகியோர் கையெழுத்திட்டனர். ‘லிகோ’ 2023ம் ஆண்டு முதல் செயல்படத்துவங்க இருக்கிறது.
