இது நம்ம ‘ரமணா’ – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

வானிலை அதிகாரி ரமணன் சாரின் ஓய்வுதான் இன்னைக்கு ட்ரெண்ட் ஆப் தி டே. உண்மையாகவே, சென்டிமென்ட் நிறைந்த தமிழர்கள் கொஞ்சம் ஃபீல் ஆகித்தான் வழியனுப்பி வைத்தார்கள். அதிலும், ட்விட்டர் சந்து முழுக்க மூக்கைs சிந்தியபடிதான் டிவிட் எழுதிக்கொண்டிருந்தனர். ரமணன் ஸ்பெஷல் ட்விட்ஸ் கீழே…

//@GokulTalks

ADVERTISEMENT

வானிலை ஆய்வாளர் ரமணன் ஓய்வு!!! மாணவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்த காட்சி !!! //

// ‏@iyyanars

ADVERTISEMENT

ஸ்கூல் டைமா இருந்தா பசங்க போராட்டத்துல இறங்குனாலும் இறங்கிடுவாங்கன்னுதான்…ரமணன் சாருக்கு எக்ஸாம் டைம்ல ஓய்வு குடுத்திருக்காங்கபோல!//

//@itz_parthi

ADVERTISEMENT

வாழும்போதே கடவுளானவர்

இளைஞர்களின் சூப்பர் ஸ்டார்

விடுமுறை தினத் தந்தை”, ‘ரமணன்’ சார்க்கு வாழ்த்தி வழியனுப்புவோம் //

// ‏@raatworaa

கேப்டன் முதல்வரானால், ரமணா மாதிரி ஊழல் எதிர்ப்புப்படை உருவாக்கப்படும். பிரேமலதா

அதெல்லாம்வேணாம் ரமணன் மாதிரி வானிலை ஆராய்ச்சியாளர உருவாக்குங்க//

// @hajaadeen

தன் அப்பா ரிட்டையர் ஆனபோதுகூட கல்லுமாதிரி இருந்த பசங்க, ரமணன் ரிடையர் ஆனதும் கண்னீர் விட்டு அழுதாங்க!//

//@Crosstalk4 15h15 hours ago

Annauniversity எக்ஸாம் டைம் டேபிள் ஒரு வாரத்துக்கு இருக்கும். ஆனா, இவரு ஒரு மாசம் நடத்தி வைப்பார். அது ஒரு மழைக்காலம் thank u #Ramanan sir .//

//@ImLajapathiRai 54m54 minutes ago

கத்தாரில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.ரமணன் அவர்களின் ஓய்வை எதிர்த்து மழை பொழிகிறது //

//‏@skpkaruna 2h2 hours ago

காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் போன்ற நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து அழுத்தமாக உச்சரித்த ரமணன்.

#Ramanan //

****************************************************************

டி-20 கிரிக்கெட், ரஜினி கட்டவுட்டில் பாலாபிஷேகம் போன்ற செய்திகளையும் விடுவார்களா நம்ம நெட்டிசன்ஸ் அதுபற்றிய ட்விட்கள்.

// ‏@thoatta

கெயில், கோலி, தோனி ஸ்ட்ரைக் ரேட்டைவிட சென்னை விமான நிலைய கண்ணாடி உடையுற ஸ்ட்ரைக் ரேட் அதிகம்போல //

//@thimirru

ரஜினிமேல வழக்குப் போட்டவன் கட் அவுட்டை எல்லா ரஜினி ரசிகர்களும் செஞ்சு, அதுக்கு பாலாபிஷேகம் பண்ணி, இப்போ அந்தாள் மேல வழக்குப் போடனும்..//

// @SENTHIL_WIN

ரசிகர்கள்

கட்டவுட்டிற்கு

பாலாபிஷேகம்

செய்யவேண்டாம் -ரஜினி

#பாலபிஷேகம்தானே பண்ணக்கூடாதுன்னு..சந்தனபிஷேகம், இளநீரபிஷேகம்னு கெளம்பிடப் போறாங்க//

// @teakkadai 18m18 minutes ago

இந்தியா விளையாடும் 20-20, தினமும் மாலையில் இருந்தால் மேனேஜர்களுக்கு வேலை எளிது. அவசரப்படுத்தாமலேயே அவரவர் வேலையை முடித்து விடுகிறார்கள்.//

//@thoatta

நாளைக்கு கெயில் 35 தாண்ட மாட்டான், ரோஹித் ரன்னடிக்கிறான், இந்தியா ஜெயிக்குது # பார்ப்போம் 🙂 //

*******************************************************************************************************

சுரேஷ் கண்ணன் – சினிமா விமர்சகர், எழுத்தாளர். அவர் ‘தெறி’ படத்தில் மகேந்திரன் நடித்திருப்பது குறித்து பதிந்துள்ள நிலைத்தகவல் இது.

//

Suresh Kannan

18 mins ·

‘தெறி’ திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் வில்லராக (?!) நடிக்கிறார் என்ற செய்தியினாலேயே அத்திரைப்படத்தின்மீது ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது உண்மை. விஜய்யின் படங்களின் மீதெல்லாம் எதிர்பார்ப்பு ஏற்படும் என்று சொல்லநேர்வது காலக்கொடுமைதான் என்றாலும்,

என்னளவில், தமிழில் இரு மிகச்சிறந்த இயக்குநர்கள் உண்டு. ஒருவர் பாலுமகேந்திரா, இன்னொருவர் மகேந்திரன்.

கலை அழகியலுடன் கூடிய யதார்த்த திரைப்படங்களாக இயக்கியவர் அதற்கு முரணாக ஒரு வெகுசனத் திரைப்படத்தில், அதிலும் அபூர்வமாக நடிக்க ஒப்புக்கொண்டது, ஒருவகையில் ஆச்சரியம்தான்.

ஒருவேளை, அவர் நடிக்கத் தயாராக இருந்து, அவர் பெரிய இயக்குநர் என்பதனாலேயே எவரும் அணுகத் தயாராக இல்லாமல், இளங்கன்று பயமறியாது என்பதுபோல, அட்லி போய்க் கேட்டு அசால்ட்டாக சாதித்துவிட்டாரா அல்லது மகேந்திரன் அசந்துபோகிற அளவுக்கு அந்த ஸ்க்ரிப்ட்டும், அவருடைய பாத்திரமும் அற்புதமானதா! என்று பார்ப்பதற்காகவாவது தெறியை பார்த்துதான் ஆக வேண்டும்.

ஆனால், இதுவரை தமிழ்த் திரையில் பெரிய இயக்குநர்கள் நடிக்கவந்து ஆவலை ஏற்படுத்தி பின்பு, அந்த ஆவல் மோசமாக வீழ்ச்சியடைந்த முன்னுதாரணங்கள்தான் உண்டு. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா. (ஆம். பாலுமகேந்திரா).

பழைய திரைப்படங்களில் வேறு எவராவது இதை முறியடித்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள். மனோபாலா, தம்பி ராமையா, சமுத்திரக்கனி என்றெல்லாம் சொல்லாதீர்கள். நான் சொல்லவந்தது சீனியர் இயக்குநர்கள்.

இதே மகேந்திரன், இலங்கையில் பிரபாகரனைச் சந்தித்தபோது அவர், ‘ஏன் பாரதிராஜா, ஆய்த எழுத்து போன்ற மோசமான திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்?’ என்று கேட்டு, வருத்தப்பட்ட தகவலும் மகேந்திரன் எழுதிய கட்டுரையின் மூலமாகவே நினைவுக்கு வருகிறது.

எப்படியிருந்தாலும், இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கிறார் என்பதற்காகவாவது தெறி சில நாட்கள் ஓடட்டும். //

-லாக் ஆஃப்,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share