காலைல வந்த மழைக்கும் அந்த இதமான காத்துக்கும் விடிஞ்சது கூடத் தெரியாம தூங்கிட்டேன். அடிச்சு புடிச்சு அவசரமா ஆஃபீஸ் கிளம்பினா எதிர் வீட்டு குட்டி பையன் திடீர்ன்னு பக்கத்தில வந்து கொஞ்சம் நில்லுண்ணே உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்னான். ‘என்னடா..கேளு’ன்னு சொன்னதுக்கு, ‘அண்ணே, உங்க ஆஃபீசில ஃபெயிலான பசங்களுக்கு வேல குடுப்பாய்ங்களா’னு கேக்குறான். ஏன்டான்னு கேட்டா ‘பப்ளிக் எக்ஸாம் வருது. நான் வேற டைபாய்டு வந்து கொஞ்ச நாள் ஸ்கூலுக்கு போகல. ஃபெயிலாயிருவேனான்னு பயமா இருக்குண்ணே. அதான் அப்படி நடந்தா பேசாம வேலைக்கு போலாம்னு இருக்கேன்’ன்னு சோகமா சொல்றான். இத கேட்டு ‘பத்து வயசு கொழந்தையோட பக்குவத்த பாருடா.. நீயும் இருக்கியே’ன்னு அம்மா வேற என்னைய திட்டுறாங்க. ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ போய் நல்லா படி பாஸ் ஆவே’ன்னு சொல்லிட்டு ஆஃபீஸ் வந்தேன். ஈவினிங் டீ குடிக்க போனா அங்க நாலு பேரு கூடி நின்னு ஏதோ வீடியோ பாக்குறாங்க. நானும் லைட்டா எட்டிப்பாத்தா ‘என் தம்பிங்க மேல கேஸ போடுறவங்கள எல்லாம் கொலை பண்ணிருவேன்னு’ சீமான் ஐயா பேசிட்டு இருக்காரு. நேத்து கேட்ட இட்லி கதையோட எஃபெக்டே இன்னும் போகல. அதுக்குள்ள அடுத்ததான்னு ஃப்ரெண்டு கேக்குறான். நாம எதுவும் பேசி வச்சு வம்ப வாங்க வேண்டாம்னு டக்குன்னு டீக்கடை அண்ணன பாத்து ‘டீ செம்ம அண்ணே’ன்னு சொல்லிட்டு வந்தேன். நீங்க அப்டேட்ட படிங்க.
**கோழியின் கிறுக்கல்!!**
எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், கைப்பேசி சார்ஜ் ஏறின உடனே அலாரம் அடிக்கிற மாதிரி கண்டுபிடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்!!!
**Dhinesh Venugopal**
‘நான்தான்டா இனிமேலு’ – ரஜினி
இப்படிதான் தலைவரே 1996 ல இருந்து நினைச்சுட்டு இருக்கோம்! – ரசிகன்
தர்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் pic.twitter.com/9Q9EYpCtph
— 5477urk44r4n (@satturkaaran) November 27, 2019
**ஜோக்கர்… ????????**
எழுதுங்கள் என் கல்லறை மீது,
பகைவர்களை அழிக்க என் தம்பி சீமான் “பசியுடன் காத்திருக்கிறான்” என்று..!!!
பிரபாகரன்
**இதயவன்**
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கபடும் # எடப்பாடி
வெங்காயத்துக்கு மட்டும் காசு கொடுத்தா கறிக்கு யாரு கொடுப்பாங்க சாமி ?!!????
**ஜோக்கர்**
ஏழைகளின் டாக்டருக்கான கல்வித்தகுதி,
“B.Pharam”
**ரஹீம் கஸ்ஸாலி**
கலைஞரை முதல்வர் ஆகவிடாமல் தடுத்தது நான் தான்- சீமான்
முதல்வராகும்போது கையெழுத்து போடலாம் என்று நினைத்து அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பேனாவை தூக்கிட்டு வந்திருப்பாரோ?
**கோழியின் கிறுக்கல்!!**
எனக்கு என்னவோ சீமான் தயாரிப்பாளர்களுக்கு சொல்வதற்காக எழுதி வைத்த Scriptஐ தான்,
தம் பொதுக்கூட்டங்களில் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது!!

**அபிவீரன்**
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களிடம் கட்சி பணம் கேட்காது!- டிடிவி தினகரன்.
மாறாக காசு கொடுக்கும் என்று கட்சியின் சார்பாக அறிவிக்கப்படுகிறதா?
**பழைய சோறு**
பெண் குழந்தைகளுக்கும் பவுடர் டப்பாக்களுக்கும் ஓர் அலாதியான உறவுண்டு..!
**சின்னவன் **
மழையை அதிகம்
நேசிக்கிறவங்க பள்ளி குழந்தைகள் தான்!!
**பாட்டி வைத்தியம்**
பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
**கோழியின் கிறுக்கல்!!**
அடக்கமான வாட்ஸ்அப் க்ரூப்பை உயிர்பிக்க ஒரு சிறந்த வழி,
ஒரு செய்தியை பதிந்து அதை உடனே அழித்து விடுவது தான்!!

**Sonia Arunkumar**
5ஆவது, 8ஆவதுக்கு பொதுத்தேர்வாம்ல? 1ஆம் வகுப்பை எதுக்கு விட்டு வெச்சிட்டு?? முதல்லையே ஃபெயிலாக்கிட்டா மொத்தமா சோலி முடிஞ்சிரும்ல?
**கோகுல்_ நாத்**
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
கருத்து-
துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்போவது போல் துவுவதே மழை.
-தங்கை
**முகமூடி**
என்னை நேசிக்கும் ஒரே ஜீவன்..!!
நான் தூங்கும்போது எனக்காக பாட்டு பாடும் ஒரே ஜீவன்..!!
எவ்வளவுதான் துரத்தி விட்டாலும்
மீண்டும் என்னை தேடிவந்து முத்தமிடும் ஒரே ஜீவன்..!!
~கொசு
**ராஸ்கல்**
புரியாத உறவுகளிடம் புரிய வைப்பதை விட விலகி வேர்க்கடலை சாப்பிட்டு பொழுதை போக்கலாம்
**۷íppedu ۷eera**
எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள் இல்லையெனில் சாக வேண்டியதுதான்! – சீமான் #
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா
-லாக் ஆஃப்
