ஆவணி மாத நட்சத்திர பலன் – சுவாதி!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Selvam

சுணக்கம் நீங்கி சுபிட்சம் அதிகரிக்கும் காலகட்டம்.

பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.  திட்டமிடலும் நேரடி கவனமும் இருந்தால் நன்மைகள் தொடரும்.

மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். உடனிருப்போர் ஒத்துழைப்பு கிட்டும். இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும்.

அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகளால் யோகம் உண்டு.

சுபகாரியத் தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும்.

செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி உண்டு.

கூடா நட்பினால் வீழ் பழிகள் வரலாம், கவனம் தேவை.

படைப்பாளிகளுக்கு அரசுவழிப் பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு.

மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். வாழ்க்கைப் பயணத்தில் வித்தைகாட்டல் வேண்டாம்.

காது,மூக்கு, தொண்டை, சளித் தொல்லைகள் வரலாம்.

அங்காளம்மன் வழிபாடு அநேக நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கலைஞர் நாணய வெளியீட்டு விழா… ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி பதிவு!

ஆவணி மாத நட்சத்திர பலன் – சித்திரை!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share