தூய்மை பணி : குப்பைகளை அள்ளிய பிரதமர், ஆளுநர், முதல்வர்கள்!

Published On:

| By Monisha

swachh bharat in india today

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று (அக்டோபர் 1) தூய்மை பணிகள் நடைபெற்றன.

அக்டோபர் 1 ஆம் தேதி ஸ்வச் பாரத் (தூய்மை) இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுவதும் ஏராளமானோர் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியவுடன் இணைந்து டெல்லியில் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டார். அவர் கையில் துடைப்பத்தை எடுத்து ஒரு தோட்டத்தில் குப்பைகளை சுத்தம் செய்தார்.

https://twitter.com/narendramodi/status/1708383866711642496

ADVERTISEMENT

உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் பாஜகவினருடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். துடைப்பத்தால் சாலையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தார் அமித்ஷா.

https://twitter.com/SwachhBharatGov/status/1708356740356669721

ADVERTISEMENT

டெல்லியில் தன்னார்வலர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தூய்மை பணியில் ஈடுபட்டார்.  “சமீப ஆண்டுகளாக நாடு முழுவதும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அது இன்று வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது ”என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சீதாபூர் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.

மும்பையில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மகாராஷ்ட்ர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்தார்.

https://twitter.com/rajnathsingh/status/1708384252298248320

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நைனார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது வட்டாட்சியர் ரவி, மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்பு வாசிகள் என பலர் ஆளுநருடன் இணைந்து குப்பைகளை சுத்தம் செய்தனர்.

https://twitter.com/rajbhavan_tn/status/1708408668570751407

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டார். குப்பைகளை சுத்தம் செய்தது மட்டுமின்றி மரக்கன்றுகளையும் அண்ணாமலை நட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு சாலையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தார். அவர் சுத்தம் செய்யும் வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/VanathiBJP/status/1708364754811838697

 

இவ்வாறு நாடு முழுவதும் ஏராளமான மக்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் ஸ்வட்ச் பாரத் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் தூய்மை பாரத் திட்டத்தை முன்னிட்டு, “ஆரோக்கியமான சூழல் தூய்மையான சூழலுடன் தான் தொடங்குகிறது. இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/rajinikanth/status/1708405923880788261

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்மா முதல் அண்ணன் வரை… அதிமுகவின் புதிய மாசெ ஜெயசுதா பேட்டி!

“லால் சலாம்” அப்டேட்: இன்றைக்கு ரஜினி-க்கு போட்டி ரஜினி தான்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share