பாஜக மீது சந்தேகம்.. சொந்த கட்சி கவுன்சிலர்களை சிறை வைத்த ஏக்நாத் ஷிண்டே

Published On:

| By Mathi

Eknath Shinde BMC

மும்பை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெறும் நிலையில் தமது கட்சியின் கவுன்சிலர்களை நட்சத்திர ஹோட்டலில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடைத்து வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. மேயர் பதவியைப் பெறுவதற்கு 114 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை.

ADVERTISEMENT

ஆனால் மும்பை மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கு 89 இடங்களும் ஷிண்டே சிவசேனாவுக்கு 29 கவுன்சிலர்களும் உள்ளனர். இதனால் பாஜக- சிவசேனா கூட்டணி மேயர் பதவியை கைப்பற்ற இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு துணை மேயர் பதவி தரப்படுகிறது.

இருப்பினும் மேயர் தேர்தல் முடியும் வரை தமது கட்சியின் வார்டு கவுன்சிலர்கள் 29 பேரையும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே அடைத்து வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக மற்றொரு சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பாஜக மீது அச்சம் இருப்பதாலேயே, தமது கட்சி கவுன்சிலர்களை பாஜக வளைத்துவிடும் என்பதாலே ஷிண்டே அவர்களை சிறை வைத்துள்ளார் என விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share