சிறை தண்டனை நிறுத்திவைப்பு : மீண்டும் எம்.எல்.ஏ.வாகும் பொன்முடி?

Published On:

| By Kavi

ex minister Ponmudi to become MLA again

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று(மார்ச் 11) நிறுத்தி வைத்தது.

இதனால் பொன்முடி மீண்டும் எம்எல்ஏ-வாக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்முடியின் சொந்த தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்குச் சட்டப்பேரவை செயலகம் கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில்,

“தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அந்த உத்தரவையே நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீது எந்தஒரு தண்டனையும் இல்லை. இதனால் அவருக்கு என்னென்ன பதவி இருந்ததோ, அது மீண்டும் வந்துவிடும்

2023ல் டிசம்பர் மாதம் விதித்த தீர்ப்பால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். தற்போது நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை நிறுத்திவைத்ததால் எம்.எல்.ஏ.பதவி அவருக்கு வந்துவிடும். அமைச்சர் ஆவதற்கும் தடையில்லை.

இந்நிலையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானது என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ex minister Ponmudi to become MLA again

நீதிமன்ற தீர்ப்பே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த கடிதத்தைத் திரும்ப பெற வேண்டும் என்பதுதான் சட்ட நடைமுறை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கும் போது, மேல்முறையீட்டுக்குச் சென்று தண்டனையை நிறுத்தி வைக்கும் வரை மூன்று மாதங்களுக்குத் தகுதி நீக்கம் இல்லை என சட்டத்தில் இடம் இருந்தது.

ஆனால் லில்லி தாமஸ் என்ற வழக்கில், இதுபோன்று மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கக்கூடாது. அது பாகுபாடானது என்று கூறி  உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

அதனால் தண்டனை விதிக்கப்பட்டதும் உடனே தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்” என குறிப்பிட்டார்.

இந்தச்சூழலில் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ. பதவி கோரி சட்டப்பேரவை செயலாளரை பொன்முடி மீண்டும் அணுகலாம் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

முன்னதாக அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராகுல் காந்திக்கு  2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி எம்.பி.பதவியை இழந்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்தது. இதனால் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மக்களவை தேர்தல் தள்ளிப்போகிறதா? – முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

மோடிக்கு 108 கேள்விகள்- அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடிப் புத்தகம்!

ex minister Ponmudi to become MLA again

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share