பட்ட காலிலேயே படும் என்பதுபோல மும்பை அணி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. suryakumar yadav ipl 2024
ஐபிஎல் தொடரின் டான்ஆக திகழ்ந்த மும்பை அணி கடந்த சில வருடங்களாக கோப்பை வெல்லவில்லை. இதனால் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை ரூபாய் 15 கோடி கொடுத்து வாங்கி, புதிய கேப்டனாக அறிவித்தது.
இது அந்த அணியில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது. பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் என அந்த அணியைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
அதோடு ரசிகர்களும் அந்த அணியின் சமூக வலைதள பக்கங்களை அன்பாலோ செய்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டி2௦ தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ தற்போது வெளிப்படையாக பேசியுள்ளது. இதற்காக அவர் ஜெர்மனிக்கு சென்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறாராம்.
சிகிச்சைக்கு பின்னர் சூர்யா சில மாதங்களேனும் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்தே மீண்டும் அணிக்குத் திரும்ப முடியும்.
இந்த நிலையில் வருகின்ற ஐபிஎல் தொடரானது நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மார்ச் மாதமே தொடங்கவுள்ளது. அதற்குள் சூர்யகுமார் முழுவதும் குணமாகி ஐபிஎல் தொடருக்குத் திரும்புவது சந்தேகம் தான்.
கடந்த சீசனில் மும்பை அணியின் துருப்புச்சீட்டாக இருந்து, அந்த அணியை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்றவர் சூர்யகுமார் தான்.
இந்த சீசனில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால் மும்பை அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து தொழிற்சங்கம் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!
சென்னையில் வருமான வரித்துறை சோதனை!
suryakumar yadav ipl 2024