உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று நவம்பர் 24-ந் தேதி பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பிஆர் கவாய் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு , சூர்யகாந்துக்கு பதவியேற்பு செய்து வைத்தார்.
யார் இந்த சூர்யகாந்த்?
- ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் 1962 பிப்ரவரி 10-ந் தேதி பிறந்தார்.
- 1984 இல் ரோத்தக்கில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பயின்றார்.
- 2011 இல் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை சட்டப்ப் படிப்பு நிறைவு செய்தார்.
- 2000-ம் ஆண்டில் 38 வயதிலேயே ஹரியானா அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.
- 2001-ல் மூத்த வழக்கறிஞராக நியமனம்
- 2004-ல் ஹரியானா–பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- உயர்நீதிமன்ற நீதிபதியாக 14 ஆண்டுகள் பணி
- 2018 அக்டோபரில் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
- 2019 மே 24-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானார்
சூர்யகாந்த் அளித்த தீர்ப்புகள்
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றவர்.
- ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உறுதி செய்த தீர்ப்பில் பங்களிப்பு செய்தார்.
- பார் அசோசியேஷன்களில் 3-ல் ஒரு மடங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தரவில் பங்களிப்பு.
- மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் தொடர்பான விசாரணைக் குழு நியமித்து உத்தரவு
இன்று உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சூர்யகாந்த், 2027 பிப்ரவரி 9-ந் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார். ஹரியானா மாநிலத்திலிருந்து ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவது இதுவே முதல் முறை.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
