நடிகை ஜோதிகா, நடிகைகள் த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருந்து வைத்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. Surya Jyothika hosted a party for actresses

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் ’டப்பா கார்டெல்’ என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் தங்களது நட்பு வட்டாரத்திற்கு கடந்த சனிக்கிழமை விருந்து வைத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் நடன இயக்குனர் பிருந்தா, தொகுப்பாளர்கள் திவ்யதர்ஷினி மற்றும் ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

அதில் த்ரிஷாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் புதிய புகைப்படத்தையும் பகிர்ந்து, “நேரம் பறந்து கொண்டிருக்கிறது… அது உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா இருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, “நாம் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் போது வலிமையாகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

நடன இயக்குனர் பிருந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “எங்களை தன் விரல்களால் நடனமாட வைத்தவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தொகுப்பாலினி டிடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘எங்களின் புன்னகையே எல்லாவற்றையும் சொல்லிவிடும்’ என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள தொகுப்பாளினி ரம்யா, “சிறந்த நண்பர்களுடன் ஒரு நாள் நன்றாக செலவிடப்பட்டது. இதயத்தை நிரப்பும் நினைவுகள் உருவாக்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.

ஜோதிகா பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. Surya Jyothika hosted a party for actresses