நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் கங்குவா. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் போஸ்டர்களும் க்ளிம்ஸ் (Glimpse) வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வீரம்,வேதாளம், விஸ்வாசம் போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவாவின் ஓர் புது முயற்சியாக தான் கங்குவா படம் பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கொடைக்கானல், கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
தற்போது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மொத்த படக் குழுவும் தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது.
தாய்லாந்தில் கங்குவா படத்திற்கான பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆக்ஷன் காட்சிகளில் நடிகர் சூர்யா கிட்டத்தட்ட 80 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
தாய்லாந்தில் இந்த ஆக்ஷன் காட்சிகள் முடிந்த பிறகு சென்னையில் சில பேட்ச் ஒர்க் காட்சிகளை படமாக்க படக் குழு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கங்குவா படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம்.
நடிகர் சூர்யாவின் கெட்டப், வரலாற்று பின்னணி செட்டப் என இதையெல்லாம் க்ளிம்ஸ் வீடியோவில் பார்த்து கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெருமளவில் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை இயக்குனர் சிறுத்தை சிவாவும் நடிகர் சூர்யாவும் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
மாநாடா..? திருமணமா..? கலகலத்த எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழா!
அடுத்தடுத்து பாஜகவினர் கைது…. தமிழகத்திற்கு 4 பேர் குழுவை அனுப்பிய தலைமை!