நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
நடிகர் அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டனர்.
அத்துடன் நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா ஆகியோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் , நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு இன்று (மார்ச் 27 ) நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஈகோ பிரச்சனை சாதாரணமானது: ஷிகர் தவான்
ராகுல் விவகாரம் : கர்நாடகா தேர்தலில் எதிரொலிக்குமா? ஈஸ்வரப்பா பேட்டி!
