ADVERTISEMENT

சூர்யா 44 வில்லன் இவரா..? கார்த்திக் சுப்புராஜின் சர்ப்ரைஸ்..!

Published On:

| By Kavi

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்க இருக்கிறார்.

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஸ்ரேயா கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பாளர் சபிக் முகமது அலி, ஆக்சன் இயக்குநர் கேச்ச கம்பக்டீ, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, கலை இயக்குனர் ஜாக்கி ஆகியோர் சூர்யா 44 படத்தில் பணியாற்றுகின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக ஒரு பிரபல ஹீரோ நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அவர் யாரென்றால், உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநரும் நடிகருமான விஜயகுமார்தான்.

ADVERTISEMENT

சூர்யாவுடன் விஜயகுமார் பணியாற்றுவது இது முதல் முறையல்ல, நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விஜயகுமார் தான் வசனம் எழுதியிருந்தார், அதேபோல் விஜயகுமார் இயக்கி நடித்த உறியடி 2 திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

தற்போது ஒரு நடிகராகவும் விஜயகுமார் சூர்யாவுடன் பணியாற்ற உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்!

சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவை: தவிர்ப்பது எப்படி?

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: மகிழ்ச்சியாகத் தூங்கச் செல்லுங்கள், உங்களின் இறப்பு தள்ளி வைக்கப்படும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share