சூர்யா ‘42’ அப்டேட்: டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

Published On:

| By Monisha

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 42ஆவது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யா தற்போது வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது.

ADVERTISEMENT

விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படத்திற்கான வேலைகளில் இயக்குனர் சிறுத்தை சிவா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக யோகி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏற்கனவே அனிருத் ஒப்பந்தமாகி உள்ள நிலையில், (டி.எஸ்.பி) தேவி ஸ்ரீ பிரசாத்தும் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி, ஆறு, சிங்கம் ஆகிய படங்களுக்கு டி.எஸ்.பி இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT
surya 42 next update

இந்த நான்கு படங்களின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே சூர்யா-டி.எஸ்.பி கம்போ இணையும் ஐந்தாவது படமாக சூர்யா 42 அமையவுள்ளது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ரசிகர்கள், ’அப்டேட் கொடுங்க’ என்று சூர்யா 42 என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.

surya 42 next update

வணங்கான் மற்றும் சூர்யா 42 ஆகிய இரண்டு படங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.

மோனிஷா

கார்த்தி சூர்யாவுக்கு வைரக் காப்பு பரிசளித்த விருமன் விநியோகஸ்தர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share