தூய்மை பணிக்காக உதவிய சூர்யா

Published On:

| By Kavi

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் நடிகர் சூர்யா தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் வழங்கினார்.

ADVERTISEMENT
Surya 2D company donates a vehicle for cleanliness work

தமிழ் திரையுலகில் ‘ஜெய் பீம்’ போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது.

படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின்  2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார்.

நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

இராமானுஜம்

ஜெய்பீமை பின்னுக்குத் தள்ளிய காந்தாரா

சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share