சூர்யா-ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த தேவ்… என்ன விஷயம் பாருங்க…!

Published On:

| By Manjula

தமிழ் சினிமாவில் பலருக்கும் பேவரைட் ஆன ரியல் ஜோடி சூர்யாவும், ஜோதிகாவும் தான். இருவரும் தங்கள் கேரியரில் சிறந்து விளங்கிய போது திருமணம் செய்து கொண்டனர்.

இல்லற வாழ்க்கையில் மட்டுமல்லாது, சினிமா உலகிலும் சிறந்த தம்பதியாக திகழ்கின்றனர். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்த ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். தற்பொழுது இருவரும் பிசியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.

சென்னையில் தாய் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக இருந்த சூர்யா, தற்பொழுது மும்பையில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஜெய் பீம், சூரரைப் போற்று என அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்த சூர்யா யாருமே எதிர்பாராத வண்ணம் ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டினார்.

அதனைத் தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான லுக்கில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல நடிகை ஜோதிகாவும் மலையாளத்தில் காதல் டு தி கோர், ஹிந்தியில் ‘சைத்தான்’ போன்ற பிற மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த தம்பதியரின் மகன் தேவ் தனது பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். கராத்தேவில் அவர் பிளாக் பெல்ட் பெரும் விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

மேலும் பெருமிதத்துடன் தன் மகனை வாழ்த்தியுள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் தேவ்வின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிட்னஸ் மற்றும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டும் சூர்யா, ஜோதிகாபோலவே தேவ்வும் இந்த சிறுவயதிலேயே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Ghilli: திரிஷா கதாபாத்திரத்த ‘மிஸ்’ பண்ண பிரபலம்… யாருன்னு பாருங்க!

தோ அவுர் தோ பியார்: விமர்சனம்!

பியூட்டி டிப்ஸ்: வெயிலால் ஏற்படும் வேனிற்கட்டிகள்… தீர்வு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share