சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

By christopher

|

Published on 26 May 2025, 5:15 PM

suriya ott release date announced

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை 2D எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. suriya ott release date announced

கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ரெட்ரோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. suriya ott release date announced

ADVERTISEMENT

முதல் நாள் மட்டும் உலகளவில் ரூ.46 கோடி வசூலித்து இத்திரைப்படம் சாதனை படைத்தது. தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் ரூ.235 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தற்போது 25 நாட்களை கடந்து ரெட்ரோ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், ஓடிடி ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி வரும் மே 31ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பை 2D எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel